முன்னாள் படை வீரர்கள் தேநீர் விருந்து; மாவட்ட ஆட்சியர் அழைப்பு

முன்னாள் படை வீரர்கள் தேநீர் விருந்து; மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கொடிநாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொடிநாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், படைவீரர்களின் குடும்பங்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 07.12.2023 அன்று நடைபெறும் கொடி நாள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்காக பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாளாகும். வெளிப்புற அச்சுறுத்தலில் இருந்து தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் தங்கள் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புக்காக நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். முன்னாள் படைவீரர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளை நன்றியுடன் நினைவுகூறும் விதமாக படைவீரர் கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 07-12-2023 அன்று அனுசரிக்கப்படும் கொடிநாள் முப்படைகளில் இருக்கும் படைவீரர்களுக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், அந்நாளில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களும் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் தேநீர் விருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அளிக்கப்படவுள்ளது. தர்மபுரி மாவட்ட முப்படையில் பணிபுரிந்து வெளிவந்துள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், படைவீரர்களின் குடும்பங்கள் அனைவரும் கொடி நாள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story