கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

குலமாணிக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குலமாணிக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் குலமாணிக்கம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது.

இதனை திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கபட்டது. மேலும் 10 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யபட்டது. பின்னர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் மாட்டு கொட்டகை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story