வாசுதேவநல்லூரில் கால்நடை மருத்துவமனை பணி: தொடங்கி வைத்த எம்எல்ஏ ராஜா
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கால்நடை மருத்துவமனை நார்பாடு நிதியில் இருந்து கட்டப்படுகிறது. இதற்காக ரூ. 48. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ மனைக்கான கட்டிடப்பணி பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது.
பூமி பூஜையை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன் கோவில் எம்எல்ஏவுமான ராஜா தொடங்கி வைத்தார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், தென்காசிகால்நடை உதவி இயக்குநர் மகேஸ்வரி, பேரூர் திமுக செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை உதவி மருத்துவர் அருண் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சங்கரன் கோவில் நகர திமுக செயலாளர் பிராகஷ், ஒன்றிய செயலாளர் பெரிய துரை,
மாவட்ட மாணவரனி அமைப்பாளர் உதய குமார், மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மாரிச்சாமி, கால்நடை உதவி மருத்துவர்கள் கருப்பையா, ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சண்முகத் தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.