அனுமதி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் : பாஜக - போலீசார் வாக்குவாதம்

X
வாக்குவாதம்
மத்திய பிரதேசம், ராஜஷ்தான், சட்டீஸ்கர் ஆகிய வடமாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. அதற்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருச்சியில் பாஜகவினர் தங்களது கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். பின்னர் போலீசாரின் அனுமதி இல்லாமல் திருச்சி இரயில்வே சந்திப்பு எதிரே உள்ள வழிவிடு முருகன் கோவிலில் இருந்து திருச்சி தலைமை தபால் நிலையம் நோக்கி நடை பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் வழிமறித்து தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜவினர் மத்திய பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அதில் பங்கேற்ற 150 நபர்களையும் காமராஜர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாஜக வினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பேரணி செல்லாமல் இனிப்புகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்துவிட்டு பாஜக வினர் கலைந்துச்சென்றனர்.
Next Story
