ஜமாப் அடித்த பாஜக வேட்பாளர் வீடியோ காட்சிகள் வைரல்

ஜமாப் அடித்த பாஜக வேட்பாளர் வீடியோ காட்சிகள் வைரல்

ஜமாப் அடித்த அண்ணாமலை

ஜமாப் அடித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை:நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் மூன்று நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று முன்தினம் கவுண்டம்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் துடியலூர்- நஞ்சுண்டாபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கையில் அவரை வரவேற்க இளைஞர்கள் ஜமாப் அடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலை நேராக ஜமாப் அடிக்கும் இடத்திற்கு வந்து அவரும் இளைஞர்களுடன் சேர்ந்து ஜமாப் அடித்து அசத்தினார். தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story