தென்காசியில் அரசு பேருந்து விபத்து தொடர்பான வீடியோ வைரல்

தென்காசியில் அரசு பேருந்து விபத்து தொடர்பான வீடியோ வைரல்

  தென்காசியில் அரசு பேருந்து விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தென்காசியில் அரசு பேருந்து விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து அரசு பேருந்து கோவில்பட்டிக்கு இன்று காலையில் சென்று கொண்டிருந்தது. தென்காசி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற பேருந்து குத்துக்கல் வலசை பகுதியில் சென்ற போது சாலையின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அரசு பேருந்தில் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்பொழுது விபத்து குறித்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story