சொத்து தகராறில் வீட்டை சேதப்படுத்தி பெண்களை தாக்கும் வீடியோ வைரல்

சொத்து தகராறில் வீட்டை சேதப்படுத்தி பெண்களை தாக்கும் வீடியோ வைரல்

நன்னிலம் அருகே காவாலியில் சொத்து தகராறில் வீட்டை சேதப்படுத்தி பெண்களை தாக்கும் காட்சிகள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நன்னிலம் அருகே காவாலியில் சொத்து தகராறில் வீட்டை சேதப்படுத்தி பெண்களை தாக்கும் காட்சிகள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காவாலி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி கந்தசாமி இருவரும் சகோதரர்கள் ஆவர். ரத்தினசாமி கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக ரத்தினசாமி மனைவி பாப்பம்மாள் வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததன் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மகள் சாந்தி வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாப்பம்மாளின் இடம் சாந்தியின் பெரியப்பா கந்தப்ப பிள்ளை அவர் தனது மகன் கண்ணன் பெயரில் வீட்டை பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து சாந்தி தரப்பினருக்கு தெரியவந்துள்ளது இதனால் தாக்குதல் ஏற்பட்டுள்ளது இது குறித்து நன்னினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story