வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க ஆண்டு விழா

நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று விழாவை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க 27 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், Mini Expo மற்றும் ரத்ததான முகாம் கண் பரிசோதனை முகாம் ஆகியவை நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க மக்கள் தொடர்பாளர் டி.எஸ்.ஜோதிபாசு வரவேற்றார். மாவட்ட தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கே.கண்ணன், மாவட்ட பொருளாளர் பி.சௌந்தர், துணைத்தலைவர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர்கள் ஏ.முருகேசன், எஸ்.மோகன்ராஜ், வி.சீனிவாசன், என்.யுவராஜ் (எ) தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு ரத்ததான முகாம், கண் பரிசோதனை முகாம் ஆகியவற்றை துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். கூட்டத்தில் இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாநிலத் தலைவர் ஏ.சிவக்குமார், மாநில பொதுச் செயலாளர் வி.ஸ்ரீதரன், மாநில பொருளாளர் எஸ்.சுரேஷ், மாநில அமைப்பாளர் எஸ்.சரவணன், மாநில துணைத்தலைவர் ஜி.அசோக், மாநில இணை செயலாளர் எஸ்.எம்.மூர்த்தி, மண்டல 3 ன் செயலாளர் எஸ்.ஜெகநாதன், மண்டலம் 4 ன் செயலாளர் கே.சிவக்குமார், முன்னாள் மாநில தலைவர் பி.ஏ.மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர் இறுதியாக இணைச் செயலாளர்கள் என்.யுவராஜ் (எ) தினேஷ் ஏ.முருகேசன் ஆகியோர் நன்றி கூறினர்.இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருந்தனா்.

Tags

Next Story