பேராவூரணியில் வழிபாட்டு தலங்களில் விழிப்புணர்வு

பேராவூரணியில் வழிபாட்டு தலங்களில் விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் 

பேராவூரணி ஜமாலியா பள்ளி வாசலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . வரும், ஏப்.19 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களிடம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார், அனைவரும் வாக்களிக்கவேண்டும் எனவும், ஆண்கள் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல்,

வீட்டில் உள்ள அனைத்து பெண்களையும் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினார் . இதே போல் ஆதனூர் புனித அன்னாள் தேவாலயத்தில் கிறிஸ்தவ மக்களிடமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தெய்வானை , தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, அலுவலர் அஸ்ரப்அலி, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் சர்மா, ஜமாஅத் தலைவர் அப்துல் முத்தலிப் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story