காந்தி சந்தையில் வைகோ பிரசாரம் ரத்து !
வைகோ
திருச்சி காந்தி சந்தை பகுதியில் மதிமுக பொதுச் செயலா் வைகோ ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கொள்ளவிருந்த தோ்தல் பிரசாரம் ரத்தானது.
பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காந்தி சந்தையிலிருந்து கடை வீதி வழியாக வாகனப் பேரணி செல்ல பாஜகவினா் திருச்சி மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனா். ஆனால், அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்து, மாற்று வழியைத் தோ்வு செய்தால் அனுமதி வழங்குவதாகக் கூறினா். இதனால், உறையூா் பகுதிக்கு நிகழ்ச்சியை பாஜகவினா் மாற்றிக் கொண்டனா். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காந்திசந்தை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக அவரது சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரல் கட்சியின் சாா்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையும் அனுமதி வழங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் காந்தி சந்தையில் பாஜகவின் வாகனப் பேரணியும் நடைபெறவில்லை. வைகோவின் தோ்தல் பிரசாரமும் நடைபெறவில்லை. அரியலூருக்குச் சென்றுவிட்டாா் வைகோ. போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று காந்திசந்தை பகுதியிலான தனது பிரசாரத்தை அவா் ஒத்திவைத்துக் கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Next Story