விஜய் பிறந்தநாள் : சோழவந்தானில் கட்டணமில்லா பேருந்து இயக்கம்

விஜய் பிறந்தநாள் : சோழவந்தானில்  கட்டணமில்லா பேருந்து இயக்கம்

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் தமிழன் தாமு என்பவரது தலைமையில் வாடிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு நேற்று ஒரு நாள் முழுவதும் கட்டணமில்லாமல் இயக்கப்பட்டது. இதனால் வாடிப்பட்டி சோழவந்தான் மற்றும் அணி சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு பயணித்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணம் செய்த 500-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கட்டணம் இல்லாமல் பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பலன் அடைந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story