ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

இனிப்புகள் வழங்கிய விஜய் ரசிகர்கள் 

ராமநாதபுரத்தில் நடிகர் விஜய் துவக்கிய தமிழக வெற்றி கழகம் கட்சியின் தொடக்க விழாவை முன்னிட்டு அரண்மனை முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிகழகம் கட்சியின் தொடக்க விழாவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் மாவட்ட நிர்வாகி மலர்வழி மாவட்டம் மாணவரணி தலைவர் தமீம் மாவட்ட மகளிர் அணி தலைவி ரிஹானா மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் அரண்மனை முன்பு விஜய் கட்சியினர் வெற்றி கூட்டணி என்ற கட்சியை துவக்கியதன் மூலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கையில் புதிய கட்சியை துவங்கிய விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துத்தனர்.வருகின்ற 2026 நடை பெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஏகோ மனதாக வெற்றி பெற்று புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவார் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்குகிறோம் என பெருமையுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story