ஜோலார்பேட்டையில் விஜய் மக்கள் இயக்க கொடியேற்று விழா

ஜோலார்பேட்டையில் விஜய் மக்கள் இயக்க கொடியேற்று விழா

கொடியேற்று விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி கோவில் அம்மன் கோவில் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் ஜோலார்பேட்டை ஒன்றிய மாணவரணி சார்பில் கொடியேற்றம் விழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட மாணவர் அணி தலைவர் சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் விஎம் வட்டம்,தபால்காரன் வட்டம் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் கிளைகள் திறக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஜோலார்பேட்டை மாணவரணி ஒன்றிய தலைவர் கோபிநாத் மற்றும் துணைத் தலைவர் விமல் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிளை சார்பில் தலைவர் குகன் மற்றும் துணைத் தலைவர் ஆகாஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒன்றியம் மற்றும் கிளை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுக்கு சேலைகள் மற்றும் வேட்டி சட்டைகளை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story