மத்திய ரெயில்வே அமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு

X
பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை
புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய ரயில்வே மேம்பாலம், இரணியலில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்றும், விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும், வந்தே பாரத் ரெயில் ஒன்றினை சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், வேளாங்கன்னிக்கு பக்தர்கள் செல்ல வாராந்திர ரெயில், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார். குறிப்பாக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் தேவை என கேட்டு கொண்டார்.நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு நான்கு வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
Next Story
