வியாபாரிகள் சங்கத்தினரை சந்தித்து விஜய் வசந்த் ஆதரவு 

வியாபாரிகள் சங்கத்தினரை சந்தித்து விஜய் வசந்த் ஆதரவு 

விஜய் வசந்த் ஆதரவு 

கொட்டாரத்தில் வியாபாரிகள் சங்கத்தினரை சந்தித்து விஜய் வசந்த் ஆதரவு பெற்று வருகிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொட்டாரம் பகுதியைச் சார்ந்த கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story