திருமலை மகாதேவர் கோவிலில் விஜய் வசந்த்., எம்பி சாமி தரிசனம்
முஞ்சிரை திருமலை மகாதேவர் ஆலயத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் முஞ்சிறை திருமலைக்கோவிலில் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, உட்பட 12 சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் முதல் சிவாலயமான திருமலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், இந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதிஷ் குமார், துளசிதரன், முன்சிறை வட்டாரத் தலைவர் ரகுபதி, நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.