சிவகாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் கண் கலங்கிய விஜயபிரபாகர்

சிவகாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் கண் கலங்கிய விஜயபிரபாகர்
 கண் கலங்கிய விஜயபிரபாகர்
சிவகாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் கண் கலங்கிய விஜயபிரபாகர்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சியின் விஜய பிரபாகர் போட்டியிட்டார் இவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கத்தாழ்வுரை முதல் சுற்று முதல் 24 சுற்று வரை தொடர்ந்து ஏற இறங்க வாக்குகள் வாங்கிக் கொண்டிருந்தார்.

இறுதிச்சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கதாகூர் வாங்கிய வாக்குகள் மொத்தம் 3,82,876 வாக்குகள் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் வாங்கிய வாக்குகள் 3,78,243 பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வாங்கிய வாக்குகள் 1,64,149 நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுசிக் வாங்கிய வாக்குகள் 76122,

இதில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் 4633 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் இதனால் தோல்வி அடைந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் அழுத முகத்துடன் சோகத்துடன் சென்றார்

Tags

Next Story