நீண்ட வரிசையில் காத்திருந்து எழுத்தாணிப்பால் நிகழ்வில் பங்கேற்ற பெற்றோர்கள்

விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்பது பொது மக்களின் நம்பிக்கை. இதனையொட்டி கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.காலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கோவிலில் வழிபட்ட பின்னர் அரிசியில் " ஓம்" மற்றும் " அ "போன்ற எழுத்துக்களை எழுதியும் தங்களது குழந்தைகளின் கல்வியை தொடங்கினர். இன்றைய தினத்தில் கல்வியை துவங்கினால் சிறப்பு என்பதால் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கல்வியை துவங்கியிருப்பதாகவும், குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.காலை முதலே ஏராளமான பெற்றோற்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடவுளை தரிசித்து வித்யாரம்பம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Tags

Next Story