விஜயதசமியை முன்னிட்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
வேலூர் மாவட்டத்தில் விஜயதசமியை முன்னிட்டு கல்வி ஆரம்ப நாளாக கருத்தப்படும் இன்று மாணவர்கள் ஆர்வமுடன் வந்து பள்ளியில் சேர்ந்தனர். பல தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர். நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமியான இன்று, வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்விக்கு உகந்த நாளாக கருதப்படும் இன்று கல்வியை துவங்கினால் , கல்வியில் வெற்றி பெறுவார்கள் என்பது முன்னோர்களின் ஐதிகமாக திகழ்ந்து வருகிறது. அதன் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை ஆர்வமுடன் விஜயதசமி நாளில் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இன்று விஜயதசமி நாள் என்பதால் பெற்றோர்கள் பள்ளியில் ஆர்வமுடன் குழந்தைகளை கொண்டு வந்து பள்ளியில் இன்று சேர்த்தனர். இன்று பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். பின்னர் பள்ளியில் தானியமான நெல் மணிகள் மற்றும் அரிசியில் 'அ' தமிழ் எழுத்தை எழுதி கல்வியை துவங்கினார்கள். பள்ளிக்கு வந்த மாணவர்களை தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். மாவட்டத்தில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று ஆர்வமுடன் நடைபெற்றது.