விஜயகாந்த், கலைஞருடன் நல்ல நட்புறவில் இருந்தவர் - அமைச்சர் பெரியகருப்பன்

விஜயகாந்த், கலைஞருடன் நல்ல நட்புறவில் இருந்தவர் - அமைச்சர் பெரியகருப்பன்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்
விஜயகாந்த், கலைஞருடன் நல்ல நட்புறவில் இருந்தவர் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை - மேலூர் சாலையில் உள்ள சஞ்சய் நகர் முதல் மலம்பட்டி வரையுள்ள இருவழி சாலையை 4 வழி சாலையாக அமைக்க ரூபாய் 81 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ரூபாய் 78 கோடிக்கு தொழில்நுட்ப அங்கிகாரம் பெறப்பட்டு, இன்று பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அப்பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறந்த திரைப்பட நடிகராகவும், கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலினுடன் நல்ல நட்புறவு கொண்டவர். அவரது திருமணம் கூட கலைஞர் தலைமையில் நடைபெறுகிற அளவிற்கு அவருடைய அன்பையும் பெற்றவர்.

அவர் தனி அரசியல் கட்சி தொடங்கினாலும் கூட கலைஞருடனும், தளபதியுடனும் நல்ல இனக்கத்தோடு இருந்தவர். தமிழக சட்டமன்றதில் எதிர்கட்சி தலைவராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்தவர். ஆகவே அவருடைய மறைவு என்பது அரசியலுக்கும், திரையுலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு எனவும், முதல்வர் ஸ்டாலின் வேற்று கட்சி என்றும் பாராமல் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில் இராஜாஜி அரங்கில் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

உடனடியாக சென்று அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளார்‌. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என பேசினார்

Tags

Next Story