கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்

சிறப்பு பட்டிமன்றம்

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியும், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்திய சிறப்புப் பட்டிமன்றம் கனியாமூர் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. பட்டிமன்றத்தை கல்லூரி முதல்வர் ஆ.முனியன் தொடங்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) கள்ளக்குறிச்சி க.சித்ரா பங்கேற்றார். ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் நிறைவாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக தமிழ்த் துறைத் தலைவர் ம.மோட்ச ஆனந்தன் செயல்பட்டார்.

Tags

Next Story