விஜயகாந்த் உடலை பாடைகட்டி தூக்கி சென்ற பொது மக்கள்

X
பாடைகட்டி தூக்கி சென்ற பொது மக்கள்
திண்டுக்கல் அருகே விஜயகாந்த் உடலை பாடைகட்டி தூக்கி சென்ற பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த கொசவபட்டியில் விஜயகாந்தின் உருவ படத்தை வைத்து பாடை கட்டி இறுதி ஊர்வலம் பொதுமக்கள் எடுத்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமங்களில் விஜயகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் கொசவபட்டியில் உள்ள கிராம மக்கள் தேமுதிக தொண்டர்களும் இணைந்து விஜயகாந்தின் உருவப்படத்தை உடலாக வைத்து பாடை கட்டி தூக்கி சென்றனர். அப்போ சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். சிலர் மொட்டை அடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.
Next Story
