பாரதிய ஜனதாவை நம்பி ரோட்டில் நிற்கும் விஜயதரணி - நடிகை காயத்ரி ரகுராம்
கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் நாகர்கோவில் பகுதி வடிவீஸ்வரம் தேரடி வீதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பாரதிய ஜனதாவில் நான் 10 வருடமாக இருந்தேன். அவர்கள் எப்படி எல்லாம் பொய் பேசுவார்கள் என்பது எனக்கு தெரியும்.
தேர்தல் பத்திரத்தில் 8000 கோடி வாங்கி இருக்கிறார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் வேறு விதமாக அந்த கருப்பு பணத்தை கட்சிக்கு வாங்கி விட்டார்கள். அதிமுக - வை உடைக்க திட்டமிட்டு குழந்தையை கடத்துவது போல் ஒவ்வொருவராய் இழுக்க பார்க்கிறார்கள்.
இ டி - யை காட்டி மிரட்டுகிறார்கள். அந்த கட்சியை நம்பி ஒரு பெண் எம்எல்ஏ விஜயதரணி இந்த மாவட்டத்தில் இருந்து போய் இப்போது நடுரோட்டில் நிற்கிறாங்க. எம்பி சீட் அவங்களுக்கு கொடுக்கவில்லை. என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா உட்பட பல பங்கேற்றனர்.