விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 56 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 56 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடை பெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, அகிம்ஷா சோசியலிஸ்ட் கட் சியை சேர்ந்த ரமேஷ், அனைத்து ஓய்வூதியதாரர் கள் கட்சியை சேர்ந்த முனியப்பன், அம்பேத்க ரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு, தேசிய முன்னாள் படைவீரர்கள் கட்சி ஆற் காட்டான், தாக்கம் கட்சியை சேர்ந்த முத்தையா, அகில இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியை சேர்ந்த மூர்த்தி, வீரோ கே.இ.வீர். இந்தியன் கட்சி மதுரைவிநாயகம், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி முகமதுஹனீபா, தேசிய மக் கள் சக்தி கட்சி ராஜமாணிக்கம், யுனைனெட் ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சேகர், தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் பாஸ் கர், மக்கள் புரட்சி கழகம் எழிலரசு, நாடாளும் மக்கள் கட்சி மணிகண்டன் ஆகிய கட்சிகளை சார்ந்த 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளராக கலைச்செல்வி, தமிழ் தாயக மக் கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீ பாவுக்கு மாற்று வேட்பாளராக முகமதுஇலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ், விஜயா, அரசன், இசக்கிமுத்து உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆக மொத்தம் விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட் பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபி நயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபி நயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபா 2 மனுக்களும், அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் 2 மனுக்களும் தாக்கல் செய்துள் ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறு நாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

மனுக் களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர் கள் மனுதாக்கல் செய்தனர். இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.

Tags

Next Story