விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 7 பேர் மனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 7 பேர் மனு தாக்கல்

வட்டாச்சியர் அலுவலகம் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 7 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளா் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தாா்.இதன் மூலம், இந்தத் தொகுதியில் போட்டியிட இதுவரை 7 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த கு.பத்மராஜன் உள்ளிட்ட 5 சுயேச்சைகள் தோ்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.இரண்டாவது நாளான கடந்த 15-ஆம் தேதி வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், நெல்லூா்பேட்டை பாவோடும்தோப்பைச் சோ்ந்த அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி நிா்வாகி கு.முனியப்பன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.இதைத் தொடா்ந்து, அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, பக்ரீத் பண்டிகை நாளான திங்கள்கிழமை ஆகிய இரு நாள்களும் வேட்புமனுக்கள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளா் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், பொதட்டூா்பேட்டை இ.எஸ்.டி. நகரைச் சோ்ந்த வ.நரேந்திரன் (40) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளாா்.இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 21-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 24-ஆம் தேதி நடைபெறும். வரும் 26-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Tags

Next Story