விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

தேர்தல் செலவின பார்வையாளரை வரவேற்ற ஆட்சியர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மணிஷ்குமார் மீனா, மாவட்ட ஆட்சியர் பழனியுடன் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி தலைமையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இப்பணிகளை கண்காணிப்பதற்காக தேர்தல் செலவின பார்வையாளர் மணிஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று முன்தினம் விழுப்புரம் வருகை தந்தார்.தொடர்ந்து, விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தேர்தல் அதிகாரி பழனியுடன் ஆலோசனை நடத்தினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உடனிருந்தார்.

Tags

Next Story