விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

பாமக ஆலோசனை கூட்டம் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் குறித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நடந்த பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில கவுரவத் தலைவர் மணி தலைமை தாங்கினார்.வழக்கறிஞர் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம் கணேஷ்குமார், பேராசிரியர் செல்வகுமார் முன் னிலை வகித்தனர். வேட்பாளர் அன்புமணி வரவேற்றார்.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் அன்புமணி பேசுகையில், 'ஆளுங்க கட்சியினர் பணத்தை நம்பி மட்டுமே தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர். மேலும், பல்வேறு பகுதியிலிருந்து ஆளும் கட்சியினர் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் பணியாற்ற வந்துள்ளனர்.அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இது நம் சொந்த மண். மண்ணின் மைந்தனாக வியர்வை சிந்துகின்ற பாட்டாளிகளிடம் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேளுங்கள். வெற்றி ஒன்றே குறிக்கோளாக அயராது பணியாற்றுங்கள்' என்றார்.

மாவட்ட தலைவர்கள் புகழேந்தி, தங்க ஜோதி, அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சிவசக்தி, ரவி, ஏழுமலை, கோபாலகிருஷ்ணன், சக்திவேல், காமராஜ், ஜெயராஜ், மோகன், செல்வகுமார், ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ராஜா, துளசிதரன், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமி நாராயணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story