விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை
அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 212, 213, 214, 215 ஆகிய பாகங்களின் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நிர்வாகிகளுடன் இதுவரை நடைபெற்ற மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
உடன் விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபால், ஒன்றியக் கவுன்சிலர் இளவரசி ஜெயபால், முண்டியம்பாக்கம் கிளைச் செயலாளர் விஜயவேலன், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், கோவில்பட்டி நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, வட்டச் செயலாளர் பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.