விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : காவல்துறை பார்வையாளர் ஆய்வு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : காவல்துறை பார்வையாளர் ஆய்வு

 காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்குமார் பாண்டே மாவட்ட தேர்தல் அதிகாரி பழனியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறை பார்வையாளராக அஜய்குமார் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று காலை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனியை சந்தித்து இடைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.மாலை 4:45 மணிக்கு விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்து அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம், கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு பணிகள் குறித்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷிடம் கேட்டறிந்தார். பின், ஸ்ட்ராங் ரூமில் குறைந்த பட்சம் 4 பேர் வரை பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story