விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் !

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் !

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் விக்கிரவாண்டி காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் விக்கிரவாண்டி காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விக்கிரவாண்டி ஒன்றியத் தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, பொருளாளர் உமா, கிளைச் செயலாளர் ரங்கபாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மாநில துணைத்தலைவர் சங்கரன் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். போராட்டமானது, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நகை, பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்றது.

இதுபற்றி அறிந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து ஆகியோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஏமாற்றி பணம், நகையை பெற்றவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்வது, மற்றும் மாற்றுத்திறனாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை யின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் பலர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story