விளவங்கோடு பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு

விளவங்கோடு பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு

பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு 

விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினி சேரால் அரசு ஆரம்பப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்

தமிழக முழுவதுமாக இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதனுடன் தமிழகத்திலேயே குமரியில் மட்டும் தான் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பாஜக சார்பில் நந்தினி, காங்கிரஸ் சார்பில் தாரகை கட்பத் அதுபோல நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெனிபா என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டி போட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இவர்களுடன் 6 பேர் சுதந்திர வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.இந்த நிலையில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நந்தினி அவரது சொந்த தொகுதியான விளவங்கோடு தொகுதியில் உள்ள அருமனையை அடுத்த சேரால் பகுதியில் உள்ள அரசு ஆரம்பபள்ளி வாக்கு சாவடியில் சென்று முதல் ஓட்டாக தனது வாக்கை செலுத்தினார்.

Tags

Next Story