செல்பி பாயிண்ட் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து கொண்ட பொதுமக்கள்
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் களுவன்திட்டை பகுதியில் செல்பி பாயிண்ட் மூலம் தேர்தல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மேல்பு றம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கழுவன்திட்டை சந்திப்பில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செல்பி பாயிண்ட் மட்டும் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் பாபு,மேல்புறம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, சாந்தி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் வாக்க ளிப்போம் என தேர்தல் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
Next Story