லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
கைதான கிராம அலுவலர்
பட்டா மாறுதலுக்கு ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய பொன்மனை கிராம அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பெரு விளை பகுதியை சேர்ந்தவர் டேவிட் மனோகரன் என்பவரது மனைவி ராணி. இவரது தாயார் 2 ஏக்கர் 13 சென்ட் பரப்பளவு சொத்தை ராணிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். அந்த உயில் சொத்தை தனது பெயரில் பெயர் மாற்றம் செய்து தர கோரி கடந்த வருடம் 30-12-2023 அன்று ஆன்லைனில் ராணி விண்ணப்பித்து உள்ளார்.

ஆனால் சம்மந்தபட்ட பொன்மனை கிராம நிர்வாக அலுவலக அதிகாரி ரவி என்பவர் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளார். இதன் பின்னர் இது பற்றி நேரில் சென்று விசாரித்த போது ஐந்தாயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத டேவிட் மனோகரின் மனைவி ராணி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று காலை பொன்மனை கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து, மேற்படி பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மனுதாரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது மறைந்து இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரெமா அங்கு சென்று லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்தனர்.

Tags

Next Story