ஏற்காட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஏற்காட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கட்டாயப்படுத்துவதாக கூறி ஏற்காடு தாலுக்கா அலுவலகம் முன்பு கிராம் நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஏற்காடு தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஏற்காடு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செய்ய கூறி கட்டாய படுத்தும் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து சட்டையில் கருப்பு பேட்ஜ் குத்திக்கொண்டு நேற்று மாலை 6 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே ஆப்பை பயன்படுத்த எங்களுக்கு எந்தவித தேவைகளையும் செய்து தராமல் அந்த ஆப் பயன்படுத்த வேண்டி வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையிட்டு கிராம நிர்வாக அலுவலர்களை வற்புறுத்துவதாகவும் மற்றும் நிர்வாக அலுவலர்களை மிரட்டும் தொனியில் பேசி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதை தொடர்ந்து ஏற்காடு போன்ற மலை பகுதிகளில் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இந்த செயலியை பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சேலம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்ற வி.ஏ.ஓ க்களுக்கு எடுத்து கூறினார். மேலும் இந்த செயலியில் நடைமுறைக்கு கொண்டு வந்தால் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை சரிவர செய்ய முடியாது என பேசினார்.

இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சேலம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் கூறியதாவது. டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலம் கிராமத்தில் ஒவ்வொரு சர்வே எண் நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களின் விவரங்கள் இந்த செயலியின் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகள் தங்களுக்கான காப்பீடு மற்றும் விவசாய கடன் தேவைகளுக்கு இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

இந்த திட்டமானது பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாதிரி கிராமங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் இந்த செயலி இணையம் இருந்தால் மட்டுமே பயன்படும். இதனால் தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் இணையம் கிடைக்காத கிராமங்களுக்கு இந்த பணியானது மிகப்பெரிய சவாலாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ளது. குறைந்த பட்சம் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் சுமார் 2000 முதல் 2500 உட்பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திற்கும் நேரடியாக சென்று அங்கு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய முயன்றால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 என்ட்ரி என பதிவேற்றம் செய்தால் இந்த பணிக்காக மட்டுமே 60 நாட்கள் பீல்டில் இருக்க வேண்டும்.

இதனால் கிராம நிர்வாக அலுவலரின் மற்ற பணிகள் பாதிக்கப்படும். எனவே இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இந்த திட்டம் நடைமுறையில் இருக்கின்ற கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒரு குழுவானது ஆய்வு செய்தது. இந்த ஆய்வுகளில் கர்நாடக மாநிலத்தில் இந்த பணியை அவுட்சோர்சிங் முறையில் அந்த அரசாங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர். அதே போல் ஆந்திர மாநிலத்தில் இந்த பணியை பல்வேறு துறை அலுவலர்களின் பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர்களை மட்டுமே வைத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வருவாய் நிர்வாக ஆணையர் முடிவு எடுத்தார்.

இந்த முடிவுகள் குறித்தும் இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வருவாய் நிர்வாக ஆணையர் நேற்று வாட்ஸ்அப் மெசேஜில் புதிதாக பணிக்கு சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்படாதவர்கள், தகுதிகான் பருவத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை இந்த செயலியை பயன்படுத்த சொல்லி கட்டாய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு ஆணையிட்டுளார்.

இதில் சுணக்கம் காட்டும் கிராம நிர்வாக அலுவலர்களை பணியில் இருந்து நீக்கம் செய்யவும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இதனை கண்டித்தும் ஒரு திட்டத்தினை செயல்படுத்தும் போது அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் கிராம நிர்வாக அலுவலர்களை வஞ்சிக்கின்ற இந்த போக்கை கண்டித்து வருவாய் நிர்வாக ஆணையரின் ஊழியர் விரத போக்கினை கண்டித்தும் இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்ற திங்கட்கிழமை வருவாய் நிர்வாக ஆணையர் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்த கூட்டமைப்பினை அழைத்துள்ளார். அந்த பேச்சு வார்த்தையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் உடைய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில் கூட்டமைப்பினருடன் கலந்து பேசி அடுத்த கட்ட போராட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story