கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி முகாம்

கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

கிள்ளியூரில் வேளாண்மை துறை சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பாலூர் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.கிள்ளியூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கீழ்குளம் கோபால் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை பற்றி விளக்கி கூறினார். கிள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ராகிணி வேளாண்மை துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி பேசினார்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் நவனிதா தோட்டக்கலை துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விலையில் கிடைக்கும் செடி வகைகள் பற்றி பேசினார்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து வேளாண் விஞ்ஞானி அக்ரி ராஜ்குமார் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பாலூர் ஊராட்சி தலைவர் அஜித்குமார், உதவி வேளாண்மை அலுவலர் பபிதா, உதவி தோட்டக்கலை அலுவலர் நிஷாந்த் அட்மா, திட்ட அலுவலர்கள் ஹேனீ கிராப், ஜோசப் ஆக்னல் மற்றும் ஸ்டெபிஷா செய்து இருந்தனர்.

Tags

Next Story