கிராம சபை கூட்டம் : அதிகாரியுடன் ஊராட்சி தலைவர் வாக்குவாதம்.
கிராமசபை கூட்டம்
ஒலக்கூர் அருகே ஈச்சேரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் ஈச்சேரியில் கிராம சபை கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால் கூட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதிகாரிகள் வந்த பிறகுதான் கூட்டம் நடைபெறும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் அறிவித்தார். இது பற்றி அறிந்ததும் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவதாஸ் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஊராட்சி தலைவர் சேகர், நான் டம்மி தலைவராக இருக்கிறேன். புதிதாக கட்டப்பட்ட மதகு மழை யில் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு மதகு கட்டிமுடிக்காத நிலையில் பில் எப்படி பாஸ் ஆனது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தேவதாஸ், புதிதாக மதகு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஊராட்சி தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில், ஈச்சேரி ஊராட்சிக்கு நான் டம்மி தலைவராக உள்ளேன். எனது ஊரில் என்ன நடக்கிறது என்பது எனக்கு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. ஒலக்கூர் ஒன்றியத்தில் பெரும்பான்மை உள்ள தலைவரை நியமிக்க வேண் டும். குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
Next Story