கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில், கிராம உதவியாளர்களுக்கும் அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூபாய் 15700 வழங்க வேண்டும், பொங்கல் போனஸாக ரூ 7000 அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் கிராம உதவியாளர்களுக்கும் சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும், அரசானை 33ல் உரிய திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், CPS இல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் இறந்த கிராம உதவியாளர்களுக்கு CPS இறுதித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஊர்த்திப்படி வழங்க வேண்டும் மற்றும் வருவாய் திருவாக ஆணையரின் உத்தரவுக்கு முரணாக கிராம உதவியாளர்களை கிராமத்தில் பணிபுரிய விடாமல்வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உயர் அலுவலர் இல்லங்களிலும் பணி செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story