கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. வட்ட தலைவர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கருணை அடிப்படையிலான பணியினை ரத்து செய்துள்ளதை, மீண்டும் போர்கால அடிப்படையில் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் கிராம உதவியாளர்களை அரசு ஊழியர் D பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் கொளஞ்சிமணி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சென்மாலா, சரஸ்வதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story