திருவண்ணாமலை : கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை : கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை திரும்ப வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை திரும்ப வழங்கக்கோருதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1999ம் ஆண்டு பெற்றுவந்த (கடந்த 23 ஆண்டுகளாக) கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை கடந்த 8.3.23 அன்று நிறுத்தப்பட்டுள்ளது.

அதனை திரும்ப வழங்கக்கோரியும், வரையறுக்கப்பட்ட- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திடத்தை ரத்து - செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்புபடி வழங்கிட வேண்டும், இரவு காவலர் பணியை நிறுத்திட வேண்டும் உள்பட அரசு ஊழியர் கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை - நிறைவேற்ற கோரியும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை,செங்கற்பட்டு ,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தவிர்த்துதமிழகம் முழுவதும் 340 - தாலுக்கா அலுவலகங்கள் முன்பு நேற்று மாலை 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை காத்திருப்பு - போராட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் - திருவண்ணாமலைமாவட்டத்தின் 12 தாலுக்கா அலுவலகங்கள் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மலை தாலுக்கா அலுவலகங்கள் முன்பு நடைபெற்றகாத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் ஜி.கஜேந்திரன் தலைமை தாங்கினார் வட்ட இணை செயலாளர் ஆர்.சக்கரவர்த்தி வட்ட துணைதலைவர்கள் அசோக் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகிக்க வட்ட செயலளார் எஸ்.ரவி அனைவரையும் வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாநில செயலாளர் கே.பெருமாள் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கே.ரமணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 200க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் இ.கருணாநிதி நன்றி கூறினார்.

Tags

Next Story