திருவண்ணாமலை : கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

திருவண்ணாமலை : கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ஜமுனாமரத்தூரில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு ரபி பருவம் முதல் கட்டப் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2023-24 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு ரபி பருவம் முதல் கட்டப் பயிற்சியானது கல்லாத்தூர்- கிளையூர் கிராமத்தில் 25 விவசாயிகளை கொண்ட குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி தலைமையிலும்,வேளாண்மை அலுவலர் வசந்தகுமார் ஆலோசனை வழங்கினர். அதனை தொடர்ந்து உதவி வேளாண்மை அலுவலர் கனகராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபா ஆகியோரால் கிராம அளவிலான முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மத்திய மற்றும் மாநில அரசால் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

Tags

Next Story