கிராம காவல் திட்டம் - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரளால் உருவாக்கப்பட்ட மிகவும் சிறப்பான திட்டமான கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கிராம காவல் திட்டமானது மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வை அளிக்க வேண்டும் என்றும் இதன்மூலம் குற்றங்களை பெரிதும் குறைக்கும் முக்கிய நோக்கத்தோடு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியால் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு நன்மைகள் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கிராம காவலர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். இதன்படி பொதுமக்களிடம் பேசிய கிராம காவலர்கள் தற்கொலைகள் குறித்த விழிப்புணர்வு, மழைபெய்து வருவதால் சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது மற்றும் மின்சார கம்பிகள், மின்கம்பங்கள் ஆகியவற்றின் அருகில் செல்வது அவற்றை கையால் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது என்றும், போக்சோ சட்டம், குழந்தை திருமணம் , பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், போதைப்பொருள் தடுப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.