ஏலகிரி மலையில் கிரம சபா கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

ஏலகிரி மலையில் கிரம சபா கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

பெண் சிசு கொலையை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என ஏலகிரி மலையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் திருமணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும், குறிப்பாக பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்,

ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே நன்றாக வளர்ச்சி அடையும் என பேசினார். ஏலகிரி மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும், பெண்களுக்கான இலவச பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும், ஏலகிரி மலையில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும், தடையில்லா மின்சார வசதி, ஏலகிரி மலையில் உள்ள ஏரிகளை தூர் வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.

உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உறுதியளித்தார். இதில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்தியா சதிஷ் குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story