கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவர்கள் ஆண்டிமுத்து தலைமையில், தமிழகரசு கடந்த 23 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை திரும்ப வழங்க வேண்டும்,
வரைறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் டி பிரிவில் இணைக்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அ
ப்போது வட்ட செயலாளர் வேலுசாமி, பொருளாளர் தீனதயாளன், துணைத்தலைவர் சண்முகம், துணைச் செயலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.