குடியிருப்பு பகுதியில் நுழைந்த கரடிகளால் கிராம மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் நுழைந்த கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக கரடிகள் உலா வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் மஞ்சமலை சாலையில் பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச்சென்ற நான்கு கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த நான்கு கரடிகளும் அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றதால் கிராமம் மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை சுற்றித்திரியும் கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்கும் முன் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story