பஸ்சை முற்றுகையிட்ட கிராமத்தினர்

X
பேருந்தை முற்றுகையிட்ட மக்கள்
பஸ்சை கிராமத்தினர் முற்றுகையிட்டனர்.
நத்தம் கோபால்பட்டியில் இருந்து நேற்று திண்டுக்கல் சென்ற அரசு டவுன் பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டி சென்றார்.விராலிப்பட்டியில் பயணிகள் பஸ்சிற்காக காத்திருந்த நிலையில் பஸ்சை நிறுத்தவில்லை.
பயணிகள் கூச்சலிட சிறிது துாரம் தள்ளி நிறுத்தினார். ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவரை தட்டி கேட்டனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் , ''பஸ்சை எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவேன். ஓசியில் பயணம் செய்யும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என டிரைவர் சங்கர் கூறினார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த விராலிப்பட்டி சுற்றுப் பகுதியினர் பஸ்சை முற்றுகையிட்டனர்.திண்டுக்கல் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Next Story
