மேட்டூரில் கிராம மக்கள் சாலை மறியல்

மேட்டூரில் கிராம மக்கள் சாலை மறியல்

சாலை மறியல்

மேட்டூரில் சடலத்தை அடக்கம் செய்ய மயான வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அடுத்த காவேரிபுரம் ஊராட்சி கோட்டையூர்பகுதியில் ஒரு பிரிவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அங்கு யாரேனும் இறந்தால் கிழக்கு காவேரி புரத்தில் அரசு புறம்போக்கில் உள்ள மயானத்தில் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் அந்த இடத்தில் அடக்கம் செய்யக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த நிலையில் நேற்று கோட்டையூர் பகுதியை சேர்ந்த பாவாஜி என்ற முதியவர் உடல்நல குறைவால் உயிர் இழந்தார் அவரது உடலை அந்த மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது அதற்கு அதன் அருகே வசிக்கும் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மேட்டூர் சப் கலெக்டர் பொன்மணி மேட்டூர் வட்டாட்சியர் தாசில்தார் விஜி இரு பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்பட்டதால் மயானம் அருகே ஒரு இடத்தில் தேர்வு செய்து முதியவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story