கோயில் திருவிழாவை நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இத்திருவிழாவை நடப்பாண்டு நடத்திட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அனைத்து மண்டகப்படிதாரா்கள் சாா்பில் கோட்டாட்சியா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலின் செயல் அலுவலா் , ஆய்வாளரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மாரிலிங்கம் தலைமையில் கோவில்பட்டி - கடலையூா் சாலை லிங்கம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக் குழுவினருடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சரவண பெருமாள் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் 12 போ் கொண்ட தற்காலிக கிராமக் குழு திருவிழா கமிட்டி அமைத்து சித்திரை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.