கோவை அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கோவை அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

வெறிச்சோடிய வாக்கு சாவடி

கோவை அருகே அவுநாசி அத்திக்கடவு திட்டம் அகற்றபட்டதால் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோபி ராசிபுரம் கிராமத்தில் உள்ள மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டைக்கு கடந்த ஆண்டு அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் சரி வூட்டு திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அந்த குழாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் கிராமத்துக்கு வந்த இத்திட்டம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்பட்டதால் அந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு அவிநாசி அத்திக்கடவு திட்டம் வழங்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து மன அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை அந்த திட்டம் கோபி இராசிபுரம் கிராமத்துக்கு வழங்கவில்லை இதனால் கோபம் அடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இன்று காலை முதல் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான கோபி ராசிபுரம் மற்றும் கூலே கவுண்டனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்ல மாட்டோம் என தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

இதனால் இந்த கிராமங்கள் வாக்களிக்க கூடிய வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பொகலூர் கிராமத்தில் 58 வது பூத்தில் வாக்களிக்க இதுவரை யாரும் கிராம மக்கள் செல்லவில்லை.மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாக கூடிய 58 வது வாக்கு மையத்தில் இதுவரை 100 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பெரிய அளவில் அந்த மையத்தில் வாக்குப்பதிவு இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story