திமுக பிரமுகர் மீது ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

கிராம மக்களுக்கு சொந்தமான நீர்வழிப்பாதையை திமுக வட்டச் செயலாளர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சிவபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை அருகே சிவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு சொந்தமான நீர்வழிப் பாதையை திமுகவின் வட்டச் செயலாளர் கருப்பையா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதை உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சாலை மறியல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, தேர்தல் கார்டு ஒப்படைக்க இருப்பதாக கிராம மக்கள் பரபரப்பான புகாரை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வருகை புரிந்த சிவபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செய்தியாளர்களிடம் பல்வேறு விவரங்களை தெரிவித்தனர். திமுக பிரமுகர் மீது கடும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

Tags

Next Story