பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
கிராம மக்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொண்டான் துளசி கிராமத்தின் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறார்கள் அதே கிராமத்தில் பஞ்சமி நிலம் டிசி நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன ஆதிதிராவிட மக்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக சொந்த வீடு இன்றி அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கே.வி குப்பம் வட்டாட்சியர் சந்தித்து மனு அளித்ததில் தொண்டான் துளசி கிராமத்துக்கு வந்த வட்டாட்சியர் உடனடியாக தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து சென்றார் அந்த வட்டாட்சியர் மாற்றப்பட்டு தற்போது புதிய வட்டாட்சியர் பதவி ஏற்று உள்ளார்வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்தும் உடனடியாக வழங்க கோரியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்.
இந்த வட்டாட்சியரிடம் தகவலை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம பெரியோர்கள் பாண்டியன் சுப்பிரமணி வினோத் பவுன் உள்ளிட்ட கிராம பெரியோர்கள் பொது மக்களை ஒன்று திரட்டி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தும் வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் கார்டு ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் வழங்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர் . இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.